ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு பிரித்தானியா அச்சுறுத்தலாக உள்ளது – ரஸ்யா

பிரித்தானியா அச்சுறுத்தலாக உள்ளது

உக்ரைனுக்கு அதிகளவான கனரக ஆயுதங்களை வழங்குவதன் மூலம் ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு பிரித்தானியா அச்சுறுத்தலை ஏற்படுத்த முனைவதாக ரஸ்யா குற்றம் சுமத்தியுள்ளது.

உக்ரைனுக்கு டாங்கிகள் மற்றும் போர் விமானங்களை வழங்க வேண்டும் மோல்டோவா மற்றும் ஜோர்ஜியா போன்ற நாடுகளுக்கும் நாம் கனரக ஆயுதங்களை வழங்க வேண்டும் என பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் லிஸ் ரூஸ் அவர்கள் கடந்த வியாழக்கிழமை (28) தெரிவித்துள்ளதற்கு பதிலழிக்கும்போதே ரஸ்யாவின் நாடாளுமன்ற பேச்சாளர் டிமிற்றி பெஸ்கோ தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் தவறானவர்களின் கைகளில் போய்சேர்வதுடன், அதனால் ஐரோப்பிய நாடுகள் கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் நாம் ஏற்படுத்திய பொருளாதார மற்றும் நிர்வாக கட்டமைப்புக்கள் சீரழிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாம் தாமதிக்காது ஆயுதங்களை வழங்கவேண்டும். இந்த போரை நாம் புதிய வழிகளில் அணுகவேண்டும்.

உக்ரைன் போர் எமது போர் எனவே உக்ரைனின் வெற்றி எமது வெற்றி எனவே உக்ரைன் படையினருக்கு தேவையான அனைத்தையும் வழங்கி நாம் இந்த போரை வெல்ல வேண்டும் என லிஸ் மேலும் தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamil News