வெடிபொருளை வெட்டியவர் உடல்சிதறி பலி; சிறுவன் காயம்; கிளிநொச்சியில் பரிதாபம்

316 Views

வெடிபொருளை வெட்டியவர்வெடிபொருளை வெட்டியவர் அந்த வெடிபொருள் வெடித்ததில் இளம் குடும்பஸ்தர் உடல்சிதறி பலியானார்.

நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி உமையாள்புரத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிவலிங்கம் யுவராஜ் (வயது 25) என்ற இளம் குடும்பஸ்தரே பலியானார்.

அத்துடன், அவரின் சகோதரனான 13 வயது சிறுவனான சி. நிலக்சன் என்பவர் காயமடைந்து கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இனந்தெரியாத வெடிபொருளை குறித்த இளைஞர் கிரைண்டர் மூலம் வெட்டியபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்தது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் அவரின் வீட்டை சூழவுள்ள பகுதிகளில் ஆபத்தான வெடிபொருட்களும் அவதானிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply