மட்டக்களப்பு: சுட்டுக் கொல்லப்பட்ட பாலசுந்தரத்தின் பெற்றோர் உட்பட 16 பேர் கைது

IMG 4666 மட்டக்களப்பு: சுட்டுக் கொல்லப்பட்ட பாலசுந்தரத்தின் பெற்றோர் உட்பட 16 பேர் கைது

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவல ரால் சுட்டுக்கொல்லப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரம்  என்பவருக்கு நீதி கோரி அவரது பெற்றோர் உட்பட பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முய ன்றதாக குற்றம்சுமத்தி 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 21ம் திகதி அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் மகாலிங்கம் பாலசுந்தரம்  சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அமைச்சரின் மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

IMG 0282 மட்டக்களப்பு: சுட்டுக் கொல்லப்பட்ட பாலசுந்தரத்தின் பெற்றோர் உட்பட 16 பேர் கைது

இந்நிலையில், இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் பொது மக்கள் ஒன்றிணைந்து நீதி கோரி காந்தி பூங்காவிற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப் பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதையடுத்து காவல்துறையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருந்தவர்களிடம், ஆர்ப்பாட்டம் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறியதுடன் பாலசுந்தரத்தின் பெற்றோா் உட்பட 16 பேரை கைது செய்துள்ளனது.

மேலும் இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கவும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 மட்டக்களப்பு: சுட்டுக் கொல்லப்பட்ட பாலசுந்தரத்தின் பெற்றோர் உட்பட 16 பேர் கைது

Leave a Reply