தனியார் விமானத்தில் அமெரிக்காவுக்கு தப்பிய பசில்

432 Views

அமெரிக்காவுக்கு தப்பிய பசில்

அமெரிக்காவுக்கு தப்பிய பசில்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்சக்களை கூண்டோடு ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தனியார் விமானம் ஒன்றின் மூலம் பசில் ராஜபக்ச இன்று நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

நியுஸ் நவ் 360 ஊடகம் தனது சமூகவலைத்தள பக்கத்தில் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தனியார் ஜெட் விமானம் ஒன்றில் இன்று காலை நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட விமானம் ஒன்றில் இரத்மலானை விமான நிலையம் ஊடாக அவர் வெளியேறினார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று கொழும்பு லங்கா தனியார் வைத்தியசாலையில் பசில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று பசில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போர்வையில் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்து நோயாளர்காவு வண்டி மூலமாக யாருடைய கண்ணிலும் சிக்காது வெளியேறிச் செல்லும் நோக்கிலேயே செயற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

Leave a Reply