இலங்கைக்கு மீண்டும் உதவ முன்வந்துள்ள வங்கதேசம்

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் டொலர் கடனின் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு வங்கதேசம் நீடித்துள்ளது.

வங்கதேசம் வங்கியின் இயக்குநர்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், கடனுக்கான நிபந்தனைகளை மாற்றாத வகையில் இந்த முடிவை எடுத்ததாக வங்கதேச மத்திய வங்கியின் பேச்சாளர் செராஜுல் இஸ்லாம் தெரிவித்தார்.

வங்கதேசம், 2021 ஆண்டு மே மாதத்தில் இலங்கையுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

இதன்படி பெற்றுக்கொண்ட கடனை, இலங்கை மூன்று மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Tamil News