கிளி/சோரன்பற்று கணேசா வித்தியாலய வி.மைதானத்தில் அத்துமீறல் – எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்

வீதியை மறித்து போராட்டம்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சோரன்பற்று கணேசா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்திற்குரிய காணியில் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அடுத்து பிரதேச மக்கள் தாழையடி – புதுக்காட்டு சந்தி வீதியை மறித்து இன்று பிற்பகல்   போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக கிளிநொச்சி சோரன்பற்று கணேசா வித்தியாலயத்தின் பயன்பாட்டில் இருந்து வந்த பாடசாலைக்கென ஒதுக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை தனியார் ஒருவர் தனக்கு சொந்தமானது எனக்கூறி வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.

இதையடுத்து குறித்த விளையாட்டு மைதானத்திற்கென ஒதுக்கப்பட்ட காணியில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனைய அவதானித்த பிரதேசவாசிகள் விசாரித்த போதே குறித்த காணி விற்பனை செய்யப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

பாடசாலைக்குரிய விளையாட்டு மைதானம் விடயத்தில் நீதி கிடைக்க வேண்டும் என பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து தாழையடி – புதுக்காட்டு சந்தி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுபட்டிருந்தனர்.

Tamil News