இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கு கடுமையான கடிதமொன்றை எழுதியுள்ள இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி அமெரிக்க தூதுவர் தனதும் தனது குடும்பத்தினதும் உரிமைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
45 வருட குற்றமற்ற அரசசேவையின் மூலம் நான் ஏற்படுத்திக்கொண்ட கௌரவத்;திற்கு நீங்கள் சுமத்தியுள்ள தவறான குற்றச்சாட்டுகள் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என தனது கடிதத்தில் தெரிவித்துள்ள வசந்தகாரணகொட ஐசிசிஆர்பியின் 17 வது பிரிவின் கீழ் உங்கள் நடவடிக்கைகள் எனது உரிமை மீது நேரடியாக தலையிடுகின்றன எனவும் அமெரிக்க தூதுவருக்கான கடிதத்தில் தெரிவித்துள்ளார்
இலங்கையின் சட்டங்களின் அடிப்படையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டமை தொடர்பான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து இதற்காக தான் நியாயம் கேட்கவுள்ளதாக வசந்தகரணாகொட தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் எனது கருத்தினை கேட்கவில்லை என அமெரிக்க தூதுவருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் வசந்தகரணாகொட தெரிவித்துள்ளார்.
வசந்தமீதான தடை – ஜூலி சங் முன்கூட்டியே அலிசப்ரிக்கு தெரிவித்தார் என டெய்லிமிரரில் வெளியான விடயத்தை சுட்டிக்காட்டியுள்ள வசந்தகரணாகொட நீங்கள் ( அமெரிக்க தூதுவர்) முன்கூட்டியே வெளிவிவகார அமைச்சருக்கு தெரிவித்த போதிலும் இது குறித்து எனக்கு தெரிவிக்கவில்லை எனவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.