உலகை அச்சுறுத்தும் B.1.1.529 கொரோனா திரிபு

82 Views

B.1.1.529 கொரோனா திரிபு

கொரோனா வைரஸின் இந்த புதிய திரிபு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட திரிபுகளிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான மரபணு பிறழ்வுகளைக் கொண்டது.

இது மிகவும் அச்சுறுத்தக் கூடியது என ஓர் அறிவியலாளர் இதை விவரித்துள்ளார், மற்றொருவரோ தாங்கள் கண்ட திரிபுகளிலேயே இதுதான் மிகவும் மோசமான திரிபு என என்னிடம் கூறினார். இது இந்தத் திரிபு தொடர்பான விவரங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கும் ஆரம்ப நாட்களில் கூறப்பட்டவை.

இத்திரிபால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் தென் ஆப்பிரிக்காவின் ஒரு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இந்தத் திரிபு மேற்கொண்டு பரவியிருக்கலாம் என்பதற்கான சில குறிப்புகளைக் காண முடிகிறது.

இந்தப் புதிய திரிபு எவ்வளவு வேகமாக பரவும், கொரோனா தடுப்பூசிகளால் மனிதர்களுக்கு கிடைத்திருக்கும் பாதுகாப்பு அம்சங்களை இது எப்படி கடக்கிறது, இந்த புதிய கொரோனா திரிபை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என பல கேள்விகள் இப்போது எழுகின்றன.

B.1.1.529 கொரோனா திரிபு குறித்து பல்வேறு ஊகங்கள் வலம் வருகின்றன, ஆனால் வெகுசில தெளிவான விடைகள் மட்டுமே இருக்கின்றன.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 உலகை அச்சுறுத்தும் B.1.1.529 கொரோனா திரிபு

Leave a Reply