வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்திய அவுஸ்திரேலியா

5568 வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்திய அவுஸ்திரேலியா

வெளிநாடுகளிலிருந்து அவுஸ்திரேலியா திரும்புபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியுள்ளது அவுஸ்திரேலியா அரசு.

வெளிநாடுகளிலிருந்து அவுஸ்திரேலியா திரும்புவதற்கு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வரம்பு பாதியாக குறைக்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.

அதன்படி வெளிநாடுகளிலிருந்து அவுஸ்திரேலியா திரும்ப அனுமதிக்கப்படுபவர்களின் வரம்பு வாரம் ஒன்றுக்கு 6370-இலிருந்து 3035-ஆக குறைக்கப்படுகிறது. இது ஜுலை 14ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்நடவடிக்கையின் மூலம் தனிமைப்படுத்தல் மையங்கள் எதிர்கொள்ளும் அழுத்தத்தை குறைக்க முடியும் என பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.