அவுஸ்திரேலியா-நிச்சயத்தன்மையற்ற நிலையில் சிக்கியுள்ள இலங்கை தஞ்சக் கோரிக்கையாளர் குடும்பம்

112 Views

கடந்த 2013ம் ஆண்டில் நீல் பரா மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கையில் இருந்து தற்காலிக இணைப்பு விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருக்கின்றனர்.  ஆனால் அவர்களது விசா எந்த காரணமுமின்றி நான்கே மாதங்களில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

அதன் முதல், கடந்த எட்டு ஆண்டுகளாக இக்குடும்பம் அவுஸ்திரேலியாவில் நிச்சயத்தன்மையற்ற நிலையில் வாழ்ந்து வருவதாகக் கூறியிருக்கிறார் அவுஸ்திரேலியாவின் Ballarat நகர மேயர் Daniel Moloney. அவுஸ்திரேலியாவில் தொழிற்கட்சி தலைமையிலான அரசு புதிதாக பொறுப்பேற்றுள்ள நிலையில் அவர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் என Ballarat நகர மேயர் வலியுறுத்தி இருக்கிறார்.

இந்த விசா இரத்தினால், அவர்கள் சட்டரீதியாக அவுஸ்திரேலியாவில் பணியாற்றுவதற்கான அனுமதியில்லை. அவர்களால் அரசின் சுகாதார நல உதவிகள் மற்றும் இன்னும் பிற உதவிகளைப் பெற முடியாது.

“நாங்கள் வேலை செய்ய நினைக்கிறோம். ஆனால் வேலை செய்ய முடியவில்லை,” என இலங்கைத் தஞ்சக்கோரிக்கையாளரான நீல் பரா.

தானும் தனக்கு முன்பிருந்த மேயர்களும் முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆட்சியில் இருந்த போது, இக்குடும்பம் நிரந்தரமாக அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் என கடிதம் எழுதியிருந்தோம் எனத் தெரிவித்திருக்கிறார் Ballarat நகர மேயர் Daniel Moloney.

Leave a Reply