ஆங் சாங் சூச்சிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

451 Views

ஆங் சாங் சூச்சிக்கு 4 ஆண்டுகள் சிறை

மியான்மர் தலைவர் ஆங் சாங் சூச்சிக்கு கொரோனா விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் சிறை   தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சாங் சூச்சி சுதந்திர போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், மக்களின் போராட்டம் காரணமாக கடந்த 2015-ல் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில்ஆங் சான் சூச்சியின் கட்சி அமோக வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியுள்ள இராணுவம், ஆங் சாங் சூச்சிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மீறியது, சட்டவிரோதமாக  வோக்கி டோக்கிகளை  இறக்குமதி செய்தது, தேசவிரோதப் பேச்சு, ஊழல் என 4 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.

இந்த நிலையில், ஆங் சாங் சூச்சிக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad ஆங் சாங் சூச்சிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

Leave a Reply