தேர்தல் காலத்தில், கொழும்பில் என் மீதான ஒரு கொலை முயற்சி தொடர்பில் தகவல் கசிந்து, தற்போது அது தொடர்பில் விசாரணை நடைபெறுகிறது என தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நெறியாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் கணேசன் தெரிவித்தார்.
இதுதொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதால் மேலதிக தகவல்களை கூறமுடியாதிருப்பதிருப்பதாகவும்,விரைவில் தகவல்கள் வெளிவரும் எனவும் குறிப்பிட்டார்.
”இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் மேலதிக பாதுகாப்பை அதாவது விசேட அதிரடிப்படை பாதுகாப்பைகோரவில்லையா” என கேட்கப்பட்டதற்கு. அவ்வாறான எந்த கோரிக்கையையும் தான் விடுக்கவில்லை எனவும் ,பாராளுமன்ற உறுப்பினர் எனறவகையில் தனக்கு நான்கு காவல்துறையினர் இருப்பதாகவும்,அத்துடன் தனக்கு தனது கட்சி உறுப்பினர்களும் பாதுகாப்பு வழங்கிவருவதாகவும்,அதற்கான ஒரு அமைப்பு தங்களிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.