யாழ்.சுழிபுரம் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலைகளை வைத்து பிரித் ஓத முயற்சி- ஆலய நிர்வாகம் அனுமதி மறுப்பு

சுழிபுரம் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை

சுழிபுரம் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை

ஈழத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் யாழ். சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலைகளை வைத்து பிரித் ஓதுவதற்கு அனுமதிக்க முடியாது என ஆலய தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம், சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து இன்று ஆலய வளாகத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் இறுதியில், சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலைகளை வைத்து பிரித் ஓதுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாதென தீர்மனம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆலய தர்மகத்தா சபையும் ஆலய பக்தர்களும் ஒன்றிணைந்து மேற்கொண்ட கலந்துரையாடலில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.