நெருக்கமான நண்பனாக இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்-இந்திய பிரதமர்

440 Views

நெருக்கமான நண்பனாக இந்தியா

நெருக்கமான நண்பனாக இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாகயிருக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்

இந்திய பிரதமருக்கும் இலங்கை நிதியமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு குறித்து புதுடில்லிக்கான இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த டிசம்பரில்  இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை, குறுகியகால நடுத்தர கால பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்து ஏற்பட்ட இணக்கப்பாடுகள் குறித்து மேலும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவிற்கு  பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்திய பிரதமருக்கும் இலங்கை நிதியமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இந்திய பிரதமரின் பாராளுமன்ற இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு மிகவும் சுமூகமான சூழ்நிலையில் இடம்பெற்றது.

ஆரம்பத்தில் இலங்கை நிதியமைச்சர் ராஜபக்ச மிகவும் நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு வழங்கிய உதவிகளிற்காக இந்திய பிரதமருக்கு நன்றியை தெரிவித்தார்.

அதன் பின்னர் நெருக்கமான நண்பணாக இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாகயிருக்கும் என இந்திய பிரதமர் உறுதிமொழி வழங்கினார். இந்த சந்திப்பின் போது இருவரும் இருநாடுகளின் உறவுகளுடன் தொடர்புபட்ட பல்வேறுபட்ட விவகாரங்கள் குறித்து ஆராய்ந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News

Leave a Reply