குருத்தூர்மலையில் நிரந்தர பௌத்த அடையாளங்கள் நிறுவ முயற்சி

குருத்தூர்மலையில் நிரந்தர பௌத்த
குருத்தூர்மலையில் நிரந்தர பௌத்த அடையாளங்கள்: குருந்தூர்மலையில் பௌத்த அடையாளங்களை நிரந்தரமாக நிறுவும் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன், வரலாற்று தொன்மை வாய்ந்தவை என்று நிரூபிப்பதற்கான முன்னேற்பாடுகளுடன் அந்த வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்த நிரந்தரக் கட்டுமானப் பணிகளை பழமையான முறைமைகளுடன் தொல்பொருள் திணைக்களத்தின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்படுகின்றன என்று அறிய வருகின்றது. முல்லைத்தீவு – குமுழமுனை – குருந்தூர்மலையில் சைவ மக்கள் வழிபட்டு வந்த இடத்தை பௌத்த தொல்லிடம் என்று தொல்பொருள் திணைக்களம் என்று கூறி அந்தப் பகுதியைக் கைப்பற்றியது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இரா ணுவத்தினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சுமார் 4 மாதம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு முடிவில் அது பௌத்த தொல்லிடம் என்று தொல்பொருள் திணைக்களம் அறிவித்தது. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் பெரும் எடுப்பில், படையினரின் ஏற்பாட்டில் குருந்தாவசோக ராஜ் மாஹா விகாரைக்கான பிரித்ஓதல் வழிபாடுகள் இடம்பெற்று விகாரை பூசைகள் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், சைவர்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கக்கூடாது, அங்குள்ள சைவ வழிபாட்டு அடையாளங் கள் அகற்றப்படக்கூடாது என்று முல் லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் நிரந்தரமான நிர்மாணப் பணிகள் எவையும் மேற்கொள்ளக்கூடாது என்று நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது. ஆனாலும், குருந்தூர் மலையில் கடந்த ஜூன் 16ஆம் திகதி அங்கு கட்டடம் ஒன்று நிறுவுவதற்கான அடிக்கல் ஒன்றும் நாட்டப்பட்டதோடு, மீண்டும் அப்பகுதிக்கு மக்கள் பிரதிநிதிகள் உட்பட எவருக்கும் அனுமதி முற்றாக மறுக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான குருந்தூர்மலையை பௌத்த மயப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரனால் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் எம்.பியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல்செய் யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைகள் கடந்த பத்தாம் திகதி முதல் ஆரம்பமாகின. இந்த நிலையில், குருந்தூர் மலையில் தொடர்ந்தும் பௌத்த சின்னங்களை நிறுவும் வகையிலான நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரியவருகின்றது.

Tamil News