மட்டக்களப்பு: இளம் சமூகத்தினை சீரழிக்கும் நாசகார சக்திகள்-அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

இளம் சமூகத்தினை சீரழிக்கும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் சமூகத்தினை சீரழிக்கும் வகையில் செயற்படும் நாசகார சக்திகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையினை ஊக்கப்படுத்தி அதன் மூலம் அவர்களை குற்றச்செயல்களுக்குள் தள்ளிவிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக போதைப்பொருள்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் காவல்துறையினரால் கைப்பற்றப்படும் நிலையில் அதிகளவில் இளைஞர்கள் கைதுசெய்யப்படும் நிலையே காணப்படுகின்றது.

போதைப்பொருள் விற்பனைகள் மூலமும் அதிகளவான பணம் சம்பாதிக்கமுடியும் என்ற தவறான வகையிலும் இளைஞர்களை முன்கொண்டுசெல்லும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

யுத்ததிற்கு பின்னர் தமிழ் இளைஞர்கள் மத்தியில் போராட்டம் மற்றும் தமிழ் தேசிய உணர்வுபோன்ற எண்ணங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற ரீதியில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் மட்டக்களப்பில் தற்போது இந்த போதைப்பொருள் விற்பனைகள் அதிகரித்து வருகின்றது.

ஏற்கனவே வடக்கில் ஆவாகுழு போன்ற குழுக்கள் ஊடாக போதைப்பொருள் விற்பனைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பிலும் இவ்வாறான செயற்பாடுகள் திட்டமிடப்பட்ட வகையில் மிகவும் நுணுக்கமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளை தடுப்பதற்கு கிராம மட்டத்தில் அமைப்புகள் உருவாக்கப்பட்டு இளைஞர்கள் விழிப்புணர்வூட்டப்படவேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ளது.

Tamil News