நாடு மிக விரைவில் வங்குரோத்து நிலையை அடையும் அபாயம்- சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை

வங்குரோத்து நிலையை அடையும்
நாடு மிக விரைவில் வங்குரோத்து நிலையை அடையும் அபாயத்தில் உள்ளது. நாட் டைக் காப்பாற்றி முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான திட்டம், அடுத்த வருட ஆரம்பத்தில் முன்வைக்கப்படும் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ் வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந் வங்குரோத்து நிலையை எட்டும் அபாயத்தில் நாடு! சம்பிக்க எம்.பி. தெரிவிப்பு துரைத்த அவர், தற்போதைய நிலையில் பொது வேட்டபாளர் தொடர் பில் கதைக்காது நாடு தற்போது எதிர்கொண்டு இருக்கும் நிலை மையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான பொது வேலைத்திட்டங்கள் தொடர் பிலேயே சிந்திக்க வேண்டும்.

கடன் நெருக்கடியிலிருந்து நாட்டை எவ்வாறு மீட்டெ டுப்பது என்பதுத் தொடர்பி லான பொதுவான திட்டத்தை, ஜனவரி மாதம் முன்வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதற்கு காலதாமதமாகிவிட்டது. அரசாங்கம் கூறுவதை போன்றல்லாது நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துக்கு சென்றால் அவர்கள் நிதி ஆலோசகர்களை நியமிப்பதையே முதல்கட்ட பணியாக முன்னெடுப்பார்கள். எமக்கு கடன் வழங்கிய நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் கலந்துரையாடுவார்கள். அதன்போது நாம் வங்குரோத்து நிலையை அடைந்ததை ஏற்றுக்கொள்ள நேரிடும்.

அது உறுதிப்படுத்தப் படும். மத்திய வங்கி விசித்திரமான கதைகளைக் கூறினாலும் இலங் கையில் என்ன நடக்கின்றது என்பதை உலக நாடுகள் நன்கு அறியும் என்று மேலும் தெரி வித்துள்ளார்.

Tamil News