இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் – தமிழக மீனவர்களின் 60  படகுகள் சேதம்

525 Views

201707190723453552 Fish processing project by ship at sea SECVPF இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் – தமிழக மீனவர்களின் 60  படகுகள் சேதம்

இந்திய மீனவர்களின் சுமார் 60 மீனவப் படகுகளை இலங்கை கடற்படையினர் கற்களை வீசி நேற்றைய தினம் சேதப்படுத்தி யுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிககள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 25 படகுகளின் மீன் வலைகளையும் சேதப்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மீனவசங்க பிரதிநிதி எம்ரித், மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் தீர்வு காணப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, மீன்வளத்துறை உயர் அதிகாரிகளிடம் முறைப்பாடு பதிவு செய்யப் பட்டுள்ளது.

நன்றி – அரண் செய்

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply