இஸ்ரேல் வீரருடன் போட்டியிட மறுத்த வீரர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேற்றம்

fdsfdsfdsf 640x400 1 இஸ்ரேல் வீரருடன் போட்டியிட மறுத்த வீரர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேற்றம்

இஸ்ரேல் வீரருடன் போட்டியிட மறுத்த அல்ஜீரிய வீரர் ஃபெதி நுாரினை போட்டியில் இருந்து வெளியேற்றிச் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பிய நிலையில், அவரை இடை நீக்கம் செய்து சர்வதேச ஜூடோ சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் 2020 போட்டி நடைபெற்று வருகின்றது. இதில் 73 கிலோ எடைப்பிரிவு ஜடோ போட்டியின் இரண்டாவது சுற்றில் இஸ்ரேலின் தோஹர் புட் பூலுக்கு எதிராக களமிறங்க அல்ஜீரிய வீரர் ஃபெதி நுாரின் மறுத்து விட்டார். இதனால் அவரை ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேற்றிய ஒலிம்பிக் நிர்வாகம், அவரை சொந்த நாட்டிற்கு அனுப்ப முடிவு செய்தது.

இந்நிலையில், அல்ஜீரிய வீரர் ஃபெதி நுாரின் மற்றும் அவரது பயிற்சியாளர் அமர் பெனிக்லெஃப் இருவரையும் ஐஜேஎஃப் இடை நீக்கம் செய்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அல்ஜீரிய வீரர் ஃபெதி நுாரின், “நாங்கள் ஒலிம்பிக்கை அடைய நிறைய உழைத்தோம். ஆனால்  எல்லாவற்றையும் விட பாலஸ்தீன ஆதரவு மிகப் பெரியது” என்றார்.

ஃபெதி நுாரின் பயிற்சியாளர் கூறுகையில், “நாங்கள் ஒரு இஸ்ரேலிய வீரை எதிர் கொள்ள வேண்டியிருந்ததால், விலகிக் கொண்டோம். நாங்கள் சரியான முடிவை எடுத்துள்ளோம்.” என்றார்.

அல்ஜீரிய வீரர் ஃபெதி நுாரின் போட்டியில் இருந்து விலகியது இது முதல் முறையல்ல, இஸ்ரேலிய வீரருடன் கடந்த 2019ம் ஆண்டு நடை பெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்தும் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021