இலங்கை பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்: இலங்கை மீனவர்கள் எரிபொருள் நெருக்கடியினால்  தமது தொழிலை முன்னெடுக்க முடியாத  நிலையில், இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது.

முல்லைத்தீவு – வட்டுவாகல், சிலாவத்தை பகுதிகளில்  இந்திய மீனவர்களின் படகுகள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுள்ளதாக அப்பிரதேச மீனவர்கள் குற்றம்சுமத்துகின்றனர்.

தடை செய்யப்பட்ட இழுவை மடி மீன்பிடி முறை மூலம் இலங்கையின் கடல் வளத்தை அழிக்கும் செயற்பாட்டில் இந்திய மீனவர்கள்  சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றனர்.

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் இலங்கை பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் இந்திய மீனவர்களின் எல்லை மீறல் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Tamil News

Leave a Reply