‘2009 இதயம்’ என்ற செயற்கை குருதிச்சுற்றோட்ட தொகுதி யாழ் இளைஞனால் கண்டுபிடிப்பு

செயற்கை குருதிச் சுற்றோட்டத் தொகுதி கருவியை கண்டுபிடித்த யாழ்ப்பாண இளைஞன்!  | Jaffna Breaking News 24x7

செயற்கையான குருதிச் சுற்றோட்ட தொகுதி கருவியொன்றை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கோகுலன் என்ற இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.

இதயம் செயலிழந்தாலோ மாரடைப்பு ஏற்பட்டாலோ உடனடியாக மூன்று நிமிடங்களுக்குள் குறித்த செயற்கை குருதிச் சுற்றோட்டத் தொகுதி கருவியை உடலில் இணைத்தால் உயிரிழப்பில் இருந்து தப்பிக்க முடியும் என யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

இது முக்கியமான மருத்துவ கண்டுபிடிப்பாக இருக்கும். நுரையீரல் செயலிழந்தவர்களும் இதனை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

இதயமும் நுரையீரலும் செயலிழந்தவர்கள் இந்த கருவியை பயன்படுத்தக்கூடிய வகையில் இதயமும் நுரையீரலும் இணைந்த செயற்கையான குருதிச் சுற்றோட்ட தொகுதியாக இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கருவிக்கு ‘2009 இதயம்’ என பெயரிடப்பட்டுள்ளது என்றார்.