சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஆசிய பணியகத்தின் துணை நிர்வாகி அஞ்சலி கெளர் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளார்.
துணை நிர்வாகி அஞ்சலி கெளர் தனது விஜயத்தின் போது சிரேஷ்ட அரச மற்றும் சிவில் சமூகத் தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் உணவுப் பாதுகாப்பு, விவசாயம், எரிசக்தி மற்றும் அரசியல் துறைகளில் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அவர் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.