யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்துள்ளது.
கோட்டை காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முன்னிலையாகாத காரணத்தினாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


