தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி நல்லூரில் துண்டுப் பிரசுரம்

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதிகோரியும், இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கோரியும் முன்னெடுக்கப்படும் பேரணிக்கு வலுக்சேர்கும் வகையில் தமிழ்தேசிய பேரவையால் நல்லூரில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், நல்லூரில் இத்துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு மக்கள் விழிப்புணர்வுப் பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.