மகிந்தவின் தொல்பொருள் ஆலோசனைக் குழு;அதிலும் அத்தனை பேரும் சிங்களவர்கள்

கிழக்கில் தொல்பொருட்களைப் பாதுகாக்கும் ஜனாதிபதி  செயலணி என்ற சர்ச்சைக்குரிய செயலணி ஒன்று சிறிலங்கா அரசுத் தலைவரால் உருவாக்கப்பட்டுள்ளமை நாமறிந்ததே .இனவாத அடிப்படையில் தமிழரின் வரலாற்றிடங்களை அபகரிக்கும் நோக்கில் இந்த செயலணி அமைக்கப்பட்டதாக பலதரப்பிலுமிருந்து பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில்,அத்தகு மேலதிகமாக தொல்பொருள் ஆலோசனைக்குழு என்ற ஒரு குழு மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்டுள்ளது.

ஒன்பது பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 20 சிங்களவர்கள் இந்த ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.வேறு எந்த இன மக்களையும் உள்ளடக்கத்தை தனி சிங்கள பௌத்த அமைப்பாக இந்த ஆலோசனைக்குழு காணப்படுகிறது.

தொல்பொருட் திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களுக்கமைய, புத்தசாசன கலாச்சார மற்றும் மத விவகார அமைச்சர் என்ற வகையில் பிரமர் குறித்த குழுவை நியமித்துள்ளதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (29) அலரமாளிகையில் வைத்து மஹிந்த ராஜபக்ஷவழங்கி வைத்தார்.

நாட்டின் தொல்பொருள் தொடர்பில் அதற்கு பொறுப்பான அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும், விசேட திட்டங்கள் தொடர்பான வழிகாட்டல்களை பெறவும், கொள்கைகளை திட்டமிடவும், தொல்பொருள் தலங்களை கண்காணிக்கவும் அதன் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், இந்த ஆலோசனைக் குழுவிடமிருந்து ஆதரவு கோரப்படுகிறது.

நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு

  1. பொலன்னருவை சொலொஸ்மதான ரஜமஹா விகாரையின் விகாராதிபதி, மகா விகார வம்சிக ஷியாமோபாலி மகா நிக்காயவின் அஸ்கிரியா மகா விகார பிரிவின் அநுநாயக்க சாஸ்த்திரபதி சங்கைக்குரிய வெண்டருவே தர்ம கீர்த்தி ஶ்ரீ ரத்தனபால உபாலி தேரர்
  2. தெற்கு இலங்கையின் பிரதான சங்கநாயக்க சாஸ்த்திரபதி பண்டித வண. மெட்டரம்ப ஹேமரத்ன தேரர்
  3. அநுராதபுர ருவன்வலிசாய விகாராதிபதி பேராசிரியர் வண. பல்லேகம ஹேமரத்தன தேரர்
  4. தொல்பொருள் சக்ரவர்த்தி வண. எல்லாவள மேதானந்த தேரர்
  5. வண. எலிக்வெல சீலானந்த தேரர்
  6. அஸ்கிரிய பிரிவின் பெலிகல் கோரளையின் தலைமை சங்கநாயக்க வண. யடிகல் ஒலுவே விமலரத்தன தேரர்
  7. சோமாவதி ரஜமஹா விகாராதிபதி பேராசிரியர் வண. பஹமுனே ஸ்ரீ சுமங்கல தேரர்
  8. பேராசிரியர் வண. இந்துராகரே தம்மரத்தன தேரர்
  9. பேராசிரியர் வண. மாதுருஓயே தம்மிஸ்சர தேரர்
  10. தொல்பொருள் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஷிரான் தெரணியகல
  11. தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் டி.ஜி. குலதுங்க
  12. பேராசிரியர் காமினி விஜேசூரிய
  13. சிரேஷ்ட பேராசிரியர் நிமல் டி சில்வா
  14. வித்யஜோதி பொறியாளர் கெமுனு சில்வா
  15. சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க
  16. கட்டடக் கலைஞர் ஏஷ்லி டி வோஷ்
  17. சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ
  18. டபிள்யூ.எம்.எஸ். வீரசேகர
  19. சிறினிமல் லத்துசிங்க
  20. பேராசிரியர் முனிதாச பத்மசிறி ரணவீர