அநுராதபுரம் சிறைச்சாலை- கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உயர் நீதி மன்றம் உத்தரவு

அநுராதபுரம் சிறைச்சாலை

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 சிறைக்கைதிகள் தொடர்பில் உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்களைத் தாக்கல் செய்த அநுராதபுரம் சிறைச்சாலையின் 08 கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கு மாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைதிகளுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கு மாறு அநுராதபுரத்தில் உள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மற்றும்  சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி பாதுகாப்பு அதிகாரிகளுடன் சிறைச் சாலைக்கு வந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைதிகளை முழந்தாழிட செய்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி மனிதாபிமானமற்ற முறையில் திட்டியதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதன்பின்னர் அவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து கைதி ஒருவரின் தலையில் வைத்து அவரை அச்சுறுத்தியதாக அடிப்படை உரிமை மனு கூறுகிறது.

இதன் மூலம் தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், தங்களை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்று மாறும் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-150-october-03-2021