தமிழகத்தில் இருந்து படகு மூலம் கனடாவுக்கு தப்பிச் சென்ற வழக்கில் மேலும் ஒரு இலங்கை பெண் கைது

கனடாவுக்கு தப்பிச் சென்ற வழக்கில்

குளச்சல் கடல் வழியாக படகு மூலம் இலங்கை அகதிகள் கனடாவுக்கு தப்பிச் சென்ற வழக்கில் மேலும் ஒரு பெண்ணை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

குளச்சல் கடல் வழியாக படகு மூலம் இலங்கை அகதிகள் கனடாவுக்கு தப்பிச் சென்ற வழக்கில் மேலும் ஒரு பெண்ணை குற்றப்புலனாய்வுத்துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் போர் நடந்த போது அகதிகளாக தமிழகத்துக்கு வந்த இலங்கைத் தமிழர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு  தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 89 பேர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நெல்லை பெருமாள்புரம் மறுவாழ்வு முகாமை சேர்ந்த கருணாநிதி என்ற நிதிஷ் (வயது 35) என்பவர் தலைமையில் குளச்சல் கடற்கரையில் இருந்து படகு மூலம் கனடாவுக்கு தப்பி சென்றனர்.

இவ்வாறு தப்பிச்செல்லும் போது டியோகார்ஷியா தீவு அருகில் அந்த நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து 6 பேரை தேடி வந்த நிலையில் அகதிகள் 89 பேர் தப்பிச் செல்ல பயன்படுத்தப் பட்ட படகை , ஈஸ்வரி (50) என்பவர் தனது பெயரில் கொல்லம் நீண்டகரை மீன்வள அலுவலகத்தில் பதிவு செய்து கொடுத்தது தெரிய வந்தது.

இதையடுத்து ஈஸ்வரியை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஈஸ்வரியை 7-வது குற்றவாளியாக  காவல்துறையினர் சேர்த்துள்ளனர். இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேரை காவல்துறையினர் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் தேடி வருகிறார்கள். வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.