எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் மரணம்

112 Views

வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் மரணம்

எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் வரிசையில் நின்ற மற்றுமொரு  நபர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் இருந்த  நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 55 வயதான முச்சக்கர வண்டி சாரதி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாணந்துறை காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் அண்மைய காலத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நின்றவர்களில் 5க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். ஒருவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply