இலங்கையில் எரிபொருளுக்காக காத்திருந்த மேலுமொருவர் இன்று உயிரிழப்பு

252 Views

இலங்கையில் எரிபொருளுக்காக காத்திருந்த மேலும் ஒரு நபர் இன்று (28) உயிரிழந்துள்ளார்.

களுத்துறை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  எரிபொருளுக்காக வரிசையில் நின்ற நபர் ஒருவர் இன்று மதியம் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் களுத்துறை தெற்கு, மஹா ஹீனடியங்கல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இன்று காலை 7 மணியளவில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இவ்வாறு வரிசையில் நின்றுள்ளார்.

சுமார் ஆறு மணித்தியால நேரம் காத்திருந்த நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் குறித்த நபர் மயங்கி விழுந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamil News

Leave a Reply