இலங்கையில் ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெறும் வன்முறைகள் – பிரிட்டன் கவலை

இலங்கையில் ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெறும் வன்முறைகள் குறித்து பிரிட்டன் கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெறும் வன்முறைகள் குறித்து கவலையடைவதாக தெரிவித்துள்ள பிரிட்டன், இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்காக அனைத்து தரப்பினரையும்  உள்ளடக்கிய அமைதியான வழிமுறைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

நாங்கள் எங்கள் மனித உரிமை கரிசனைகள் குறித்து இலங்கையுடன் தொடர்ச்சியாக பேச்சுசுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்,அஹமட் பிரபு மனித உரிமைகளில் முன்னேற்றம் காணவேண்டியது குறித்தும் இலங்கை மக்களிற்கு நீதி பொறுப்புக்கூறலை வழங்கவேண்டியது குறித்தும் இலங்கை ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சரை சந்தித்தவேளை தெரிவித்திருந்தார் என பிரிட்டனின் பாராளுமன்ற பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் விக்கி போர்ட்  தெரிவித்துள்ளார்.

Tamil News