சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (05) வரை இந்த போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்தை அடுத்து அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.