ஹவுதிகளின் தாக்குதலில் ஏமன் படையினர் 59 பேர் உயிரிழப்பு

ஏமன் நாட்டில் ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு அரசின் பாதுகாப்பு படையினர் 59 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஹவுதிகள் பயன்படுத்தி உள்ளனர். ஏமன் உள்நாட்டு போரில் கடந்த நான்கு ஆண்டுகளில் இது மிக மோசமான தாக்குதல் என்று அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலில் ஏமன் கவனம் பெற்றுள்ளது. இந்த மோதலில் சவுதி அரேபியாவுக்கு ஏமன் அரசு துணை புரிந்து வருவதாக தகவல். அந்த குற்றச்சாட்டை முன்வைத்து ஏமனின் அரசு பாதுகாப்பு படை மற்றும் சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தியதாக ஹவுதிகளின்   செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ தெரிவித்துள்ளார்.