தேசிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

எதிர்வரும் நாட்களில்  நடைபெறவுள்ள பல தேசிய பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன இதனை தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரை நடைபெறும்.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 16 ஆம் திகதியும் 2022 உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tamil News