311 Views
பதவி விலகுவது சாத்தியமானதல்ல
மக்கள் ஆணையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதால், தானும் ஜனாதிபதியும் பதவி விலகுவது நடைமுறை சாத்தியமானது இல்லை என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச, பொறுமையாக இருக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சே டெய்லி மிரர் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் “மக்கள் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை.நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். நாங்கள் மக்களிடமிருந்து வந்தவர்கள்.கோட்டாபய ராஜபக்சே சிறப்பாகச் செயற்பட்டதாகவும், சிறப்பான பணியைச் செய்திருப்பதாகவும் தனிப்பட்ட முறையில் நான் கருதுகிறேன். இந்ததருணத்தில் எங்களுக்கு பணப் பற்றாக்குறை உள்ளது. இதிலிருந்து வெளியே வருவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தமாதிரி எனக்கு எதிராகச் செய்வதை விட நாம் இணைந்து செயற் பட்டிருந்தால் அதுவே சரியான செயலாக இருந்திருக்கும். தற்போதும் நான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை கொண்டுள்ளேன்”. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.