கோட்டாவின் செயலகத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களது படங்கள் அகற்றப்பட்டன

ஊடகவியலாளர்களது படங்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயலகத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களது படங்கள் காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளன.

கோட்டா அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுகப்பட்டு வரும் போராட்ட களத்தில், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிக்கோரி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக அவர்களது உருவப்படங்கள் பதாதைகளாக வைக்கப்பட்டிருந்தன.

இலங்கை அரச தரப்பினர் மற்றும் அவர்களோடு சேர்ந்தியங்கிய ஆயுதக்குழுக்களினால் படுகொலை செய்யப்பட்டிருந்த மயில்வாகனம்-நிமலராஜன், தராக்கி சிவராம், லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னலியகொட உள்ளிட்ட ஊடகவியலாளர்களது உருவப்படங்கள் பதாதைகளாக அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இலங்கை காவல்துறையினரால் அவை  அகற்றப்பட்டுள்ளன.

Leave a Reply