அமெரிக்காவின் ஈ.ஏ-18ஜி (EA-18G Growler electronic warfare jet) கடற்படையின் தாக்குதல் விமானம் ஒன்று சன்டியாகோ வளை குடாப்பகுதியில் கடந்த புதன் கிழமை(12) வீழ்ந்து அழிந்துள்ளது.
விமானம் வீழ்வதற்கு முன்னர் இரு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியதால் உயிர்தப்பியுள்ள னர்.
கடலில் வீழந்த விமானி களை மீனவர்கள் தமது படகுகளின் உதவியுடன் காப்பாற்றியுள் ளனர். பயிற்சியில் ஈடுபட்ட விமானிகள் விமானத்தை தரையிறக் கிய பின்னர் மீண்டும் மேல் எழுந்த சமயம் இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக வான்படை கட்டளை அதிகாரி கொமான்டர் பெத் ரீத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் இந்த விமானம் இலத்திரனியல் போர் தொழில்நுட்பம் கொண்டது. கடற்படையின் பாவனைக்காக உருவாக்கப்பட்ட இந்த விமானங்
கள் அமெரிக்காவின் விமானந் தாங்கி கப்பல்களில் அதிகம் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. மிக உயர் தொழில்நுட்பம் கொண்ட இந்த விமானத்தின் பெறுமதி 100 மில்லியன் டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
எதிரிகளின் இலத்திரனியல் சமிக்கைகளை குழப்புவதன் மூலம் அமெரிக்க படையினரின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கத்துடன் இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதமும் அமெரிக்கா வில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இத்தகைய விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியிருந்தது. அதன் பின்னர் கடந்த வருடம் செங்கடல் பகுதியில் குதீஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தச் சென்ற சமயம் மற்றுமொரு எப்-18 விமானம் வீழந்து நொருங்கியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.



