மீண்டும் விக்கி முதல்வராக ஆதரவு இல்லை; சிவாஜிலிங்கம் அதிரடி அறிவிப்பு

145 Views

மீண்டும் விக்கி முதல்வராக ஆதரவு இல்லை
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் களமிறங்கினால் ஆதரவளிக்கப் போவதில்லை என, சி.வி.விக்னேஸ்வரன் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

டான் தமிழ் ஒளியில் நேற்று இரவு ஒளிபரப்பான நெற்றிக்கண் நிகழ்ச்சியில், கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் மீண்டும் விக்கி முதல்வராக ஆதரவு இல்லை என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்தார். நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் வடக்கு முதலமைச்சராக களமிறங்க விருப்பம் தெரிவித்துள்ளமை தொடர்பில் சிவாஜிலிங்கத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என உறுதிபடத் தெரிவித்தார்.

அத்துடன் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மக்கள் தற்போது அளித்துள்ள பொறுப்புக்களை அவர் சரிவர ஆற்ற வேண்டும் என்பது தமது விருப்பம் என்றும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad மீண்டும் விக்கி முதல்வராக ஆதரவு இல்லை; சிவாஜிலிங்கம் அதிரடி அறிவிப்பு

Leave a Reply