பொருளாதார சிக்கலில் ஆப்கானிஸ்தான்-நோர்வே அகதிகள் குழு செயலாளர் அறிக்கை

330 Views

நோர்வே அகதிகள் குழு செயலாளர்

ஆப்கான் பொருளாதார நிலைமை குறித்து நோர்வே அகதிகள் குழு செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ள நார்வே அகதிகள் குழுவின் பொது செயலாளரான Jan Egeland அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அங்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வங்கி அமைப்பு எப்போது வேண்டுமானாலும் சரிவடையலாம். மேலும் நான் பல குடும்பங்களிடம் விசாரித்தேன்.

அப்பொழுது அவர்களில் பலர் தேநீர், காய்ந்த மாறும் பழைய ரொட்டித்துண்டுகளை உண்டு உயிர் வாழ்வதாக என்னிடம் கூறினார்கள். இப்படியே தொடர்ந்தால் ஆப்கானிஸ்தானில் மனிதனுக்கு தேவையான அடிப்படையான தேவைகள் கூட பெறமுடியாத சூழல் உருவாகிவிடும். குறிப்பாக பணப்பற்றாக்குறையை நீக்குவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

ஆனால் தற்பொழுது மனிதாபிமான தேவைகளை அங்குள்ள உதவி நிறுவனங்கள் பூர்த்தி செய்து வருகின்றனர். இருப்பினும் ஆப்கானில் பொருளாதார நிலைமையை சீர்ப்படுத்தவும் பொது சேவைகளுக்கு நிதி வழங்கவும் பணப்பரிமாற்ற நெருக்கடியை பூர்த்தி செய்யவும் உடனடியாக பன்னாட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஐ.நா. உறுப்பு நாடுகளிடம் கேட்டுக் கொண்டுள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply