மக்களின் எதிர்பார்ப்புக்கு முரணாக செயற்பட்டால் நிலைமை தீவிரமடையும் – திஸ்ஸ விதாரண

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது என, லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் கூறுகையில், “மக்களின் எதிர்பார்ப்புக்கு முரணாக செயற்பட்டால் தற்போதைய நெருக்கடி மேலும் தீவிரமடையும் என்பதை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டும். தவறான தீர்மானங்கள் முழு நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தேவைக்காகவே அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது.

நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பாக மக்கள் மத்தியில் அல்லதொரு அபிப்ராயம் கிடையாது” என்றார்.