மனசாட்சிக்கு இணங்க செயற்பட வேண்டும் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

103 Views

கட்சி அரசியல் அதிகார திட்டங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்குவது போன்ற மோசடிகளை புறந்தள்ளி விட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய தலைமைத்துவத்தை தெரிவு செய்ய மனசாட்சிக்கு இணங்க செயற்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள பகிரங்க கடிதத்தில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மேலும் “மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக கூடிய பங்களிப்பை வழங்க கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம்.

அனைத்து அதிகாரங்களுடன் கூடிய ஜனாதிபதி ஒருவர் அதிகாரத்தை கைவிட்டு செல்ல நேரிட்ட அரிய சந்தர்ப்பத்தில், தாய் நாட்டின் எதிர்காலத்திற்காக எடுக்க வேண்டிய மிக தீர்மானகரமான முடிவை நோக்கி நாட்டின் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் கூடி மக்களின் நிலைப்பாட்டுக்கு முரணான முடிவை எடுப்பார்களோ என்ற மிகப்பெரிய அச்சம் மக்களுக்குள் காணப்படுகிறது.

குறுகிய காலத்திற்கு கிடைக்கும் அரசியல் அதிகாரத்தை விட ஆத்ம கௌரவமும் தாய் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளும் முக்கியமானவை” எனவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை   கூறியுள்ளார்.

Leave a Reply