மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை

214 Views

மேற்கு ஐரோப்பாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) கடுமையான வெப்ப அலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று வடக்கு ஸ்பெயினில் 43 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் போது பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவில் தீவிர வெப்ப எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன.

பிரான்ஸ், போர்த்துகல், ஸ்பெயின் மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியா அதன் வெப்பமான நாளைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரான்ஸின் சில பகுதிகள் வெப்ப பேரழிவை எதிர்கொள்கின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிரான்ஸின் பல பகுதிகள், மேற்கு நகரமான நான்டெஸில் 42 செல்சியஸ் பதிவானதால், எப்போதும் இல்லாத வெப்பமான நாட்களைக் கண்டதாக தேசிய வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய நாட்களில் காட்டுத் தீயால் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், வெளியேற்றப்பட்டவர்களுக்காக அவசர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தென்மேற்கில் உள்ள பிரபலமான சுற்றுலாப் பகுதியான ஜிரோண்டே, குறிப்பாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, கடந்த செவ்வாய் முதல் கிட்டத்தட்ட 17,000 ஹெக்டேர் (42,000 ஏக்கர்) நிலத்தை அழித்த தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடுகின்றனர்.

Leave a Reply