இலங்கை பொருளாதாரத்தை விரைவாக மீட்டெடுக்க இந்தியா உதவும்

இலங்கைக்கு விரைவான மற்றும் பயனுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியா உதவும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் மாற்றம் சுமூகமாக இருக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது என உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர் உதவிகளை வழங்கிய இந்தியா, பொருளாதார சவால்களுக்கு மத்தியில் பல முதலீட்டைக் கொண்டுவரும் என்றும் உறுதியளித்தார்.

இதற்கிடையில், இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த கட்சிகள் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் இடம்பெறவுள்ளது.