சோமாலியாவில் சுமார் 70 இலட்சம் மக்கள் மனிதாபிமான உதவிகளுக்காக காத்திருப்பு

235 Views

கடந்த 40 ஆண்டுகளாக மிக மோசமான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது சோமாலியா.

2011-ஆம் ஆண்டு சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 10 இலட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். அதேபோன்ற வறட்சி நிலையை சோமாலியா இந்த ஆண்டும் எதிர்கொண்டுள்ளது. வரும் மாதங்களில் சோமாலியாவின் நிலைமை மேலும் மோசமாகலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், டிசம்பருக்குள் சோமாலியாவில் 3 இலட்சம் பேர் வரை உயிரிழக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

வரலாற்றில் பண்டைய எகிப்து உள்ளிட்ட நாடுகளுடன் ஏற்றுமதி செய்து செல்வ வளமிக்க நாடாகவே சோமாலியா இருந்திருக்கிறது. ரோமானியா அரசுகளுக்கு முந்தைய வரலாற்றை சோமாலியா கொண்டிருந்தது என்றாலும், காலப்போக்கில் போர்கள், நோய்கள், வறட்சி காரணமாக சோமாலியா தனது வளத்தை இழந்து பொருளாதாரத்தில் பின்தங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது.

ஆனால், சோமாலியாவின் தற்போதைய நிலை என்பது அந்நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் மோசமான வறட்சியாகவே பார்க்கப்படுகிறது. சோமாலியாவில் சுமார் 70 இலட்சம் மக்கள் மனிதாபிமான உதவிகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.இலட்சக்கணக்கான குழந்தைகள் ஊட்டசத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் சர்வதேச நாடுகளின் உதவியை சோமாலியா கோரியுள்ளது.

Leave a Reply