ஏறக்குறைய 2,000 அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதற்காக ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்கப்பட்ட விடுமுறையைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், அரசின் செலவினங்களைக் குறைக்கவும் இந்தத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அரச அதிகாரிகள் இந்த ஊதியமில்லாத விடுப்பை வெளிநாட்டில் பணிபுரியவோ, தொழில் பயிற்சி பெறவோ அல்லது அவர்களின் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவோ பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சுற்றறிக்கை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, மொத்தம் 1988 ஊழியர்கள் ஏற்கனவே வெளிநாட்டு வேலைவாய்ப்பை தொடர அனுமதி பெற்றுள்ளதாக பொது நிர்வாக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
“இந்த விடுப்பு காலம் இன்னும் பணி மூப்பு மற்றும் ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான பணிக்காலமாக கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், இந்த சுற்றறிக்கையின் விதிகள் தங்கள் பதவியில் உறுதி செய்யப்படாத நிர்வாக தர அதிகாரிகளுக்கு பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், ”என்று அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு ஏற்பாடுகளின் கீழ் ஊதியம் இன்றி விடுமுறை அளிக்கப்பட்ட பெரும்பாலான அரச ஊழியர்கள் வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் வேலை தேடிச் சென்றுள்ளனர் . அத்தகைய ஊழியர்கள், தங்களுடைய சொந்த பெயரில் திறக்கப்பட்ட ஒரு வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு (NRFC) பணத்தை அனுப்ப வேண்டும் . சுற்றறிக்கையின்படி, அனுப்ப வேண்டிய தொகையானது அதிகாரியின் சேவைப் பிரிவைச் சார்ந்தது