24 மணி நேரத்தில் மனிதர்களை கொல்லும் புதிய வைரஸ்

புறுண்டியில் பரவி வரும் புதிய வகை வைரசின் தொற்றுதலுக்கு உள்ளாகியவர்கள் 24 மணி நேரத்தில் மூக்கில் இருந்து குருதி வெளியேறி மரணத்தை தழுவி வருவதாக அந்த நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் மூன்றிற்கு மேற்பட்டவர்கள் மரணத்தை தழுவியுள்ளனர். மேற்கு ஆபிரிக்க நாடான புறுண்டியில் கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ் தொற்றிய 24 மணி நேரத்தில் மனிதர்களில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது.

இந்த நோய் தொற்றியவர்களில் காச்சல், தலையிடி மற்றும் வாந்தி ஆகிய அறிகுறிகள் தென்படுவதுடன், சுவாசத் தொகுதியின் இழையங்கள் பாதிக்கப்படுவதால் குருதிப் போக்கும் ஏற்படுகின்றது.

இந்த நோய் ஏற்பட்டவர்கள் விரைவாக மரணத்தை தழுவி வருவதால் மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் தொற்று ஏற்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொற்று ஏற்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நோய் மனிதர்களை விரைவாக கொல்வதால் தொற்று ஏற்பட்டவர்கள் மரணத்துக்காக காத்திருப்பதாக அந்த பகுதி வைத்தியசாலையின் தாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply