எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று நாளைய தினம் இலங்கைக்கு வர உள்ளதாக தகவல்

எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று நாளைய தினம் நாட்டை வந்தடைய உள்ளது.

இதற்கமைய நாளை மறுதினம் முதல் பெட்ரோல் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை கனியவள தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கருத்து வெளியிட்டுள்ள கனிய எண்ணெய் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரண்வல, மசகு எண்ணெய் இன்மையால் நாளை மறுதினம் முதல் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீள மூடவேண்டிய நிலை ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் தாங்கிய கப்பல்

இதேவேளை, போதுமான அளவு எரிபொருள் கிடைக்காமையால் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் பகலிரவாக பொதுமக்கள் வீதியில் பல கிலோமீற்றர்களுக்கு வரிசையில் காத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

Tamil News

Leave a Reply