இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்-டீசல் விநியோக செயற்பாட்டை மட்டுப்படுத்த நடவடிக்கை

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் டீசல் விநியோக செயற்பாட்டை மட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டீசல் கையிருப்பு குறைந்தளவில் காணப்படுவதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே டீசல் விநியோகிக்கப்படும் என அதன் செயலாளர் கபில நாதுன்ன தெரிவித்துள்ளார்.

மேலும் “தற்போது தினசரி டீசல் விநியோகம் சுமார் 2,500 மெட்ரிக் டன் வரையில் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் தற்போது சுமார் 40,000 மெட்ரிக் டன் டீசல் மாத்திரமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் 9 அல்லது 10 நாட்களில் ஒரு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் ஆனால் அது தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரையில் இல்லையென தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் உதவியுடன், அடுத்த டீசல் கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி நாட்டை வந்தடையும் வரையில், தற்போது கையிருப்பில் உள்ள டீசலை வைத்து தற்போதைய நிலைமையை முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கப்படுகின்றது” என்றார்.

Tamil News