உலகில் மிகச்சிறந்த புலனாய்வு அமைப்பின் தோல்வி – வேல்ஸில் இருந்து அருஸ்

01 1 உலகில் மிகச்சிறந்த புலனாய்வு அமைப்பின் தோல்வி - வேல்ஸில் இருந்து அருஸ்இஸ்ரேலிலிய அரசும் அதன் படையினரும் தொடர் பின்னடைவுகளை சந்திக்க ஆரம்பித்துள்ளனர். ஒக்டோபர் 7 ஆம் நாள் ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல் ஏழு மாதங்கள் கடந்தும் இஸ்ரேலிய ஆட்சிப்பீடத்தையும், படைத்தரப்பையும் ஆட்டம்காண வைத்துவருகின்றது.

ஏப்பிரல் 22 ஆம் நாள் திங்கட்கிழமை இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பின் பிரதம கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் அகரோன் ஹலிவா ஹமாஸின் தாக்குதலைத் தடுக்கத் தவறிய தோல்வியை ஏற்று தனது பதவியை துறந்துள்ளார். சிப்பாயாக, கட்டளை அதிகாரியாக 38 வருடங்கள் இஸ்ரேலிய படைக்கட்டமைப்பில் பணியாற்றிய அவரின் பதவி விலகல் என்பது ஹமாஸின் தாக்குதலின் பின்னர் இஸ்ரேலிய படை மட்டத்தில் இடம்பெற்ற முதலாவது உயர்மட்ட விலகலாகும்.

அவரைத் தொடர்ந்து மேலும் பல தளபதிகள் விலகலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் இஸ்ரேலில் எழுந்துள்ளன. அவருக்கு பதிலாக புதியவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் முப்படைகளின் பிரதானியான லெப். ஜெனரல் ஹெர்சி ஹலிவி தெரிவித்துள்ளார். புலனாய்வுக் கட்டளை அதிகாரியின் பதவி விலகலை பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் கலன்ற் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

02 1 உலகில் மிகச்சிறந்த புலனாய்வு அமைப்பின் தோல்வி - வேல்ஸில் இருந்து அருஸ்மேலும் ஒரு புலனாய்வுத்துறையின் ஜெனரல் தர அதிகாரி தனது புற்றுநோய்க்கான சிகிச்சை முடிந்ததும் பதவியை துறக்கவுள்ளார். இஸ்ரேலின் சின்பெற் எனப்படும் பாதுகாப்பு அமைப்பின் கட்டளை அதிகாரி உட்பட மேலும் பல மூத்த அதிகாரிகளும் மிக விரைவில் பதவியை துறக்கவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் புலனாய்வுப் பிரியின் ஆய்வு மையத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் அமிற் சார் என்பவரும் கடந்த 4 ஆம் நாள் பதவி விலகலுக்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

அதாவது உலகில் தலைசிறந்த புலனாய்வு அமைப்பாக கருதப்பட்ட இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பு ஒட்டுமொத்தமாக ஆட்டம் கண்டுள்ளது.

ஹமாஸ் தாக்கப்போகிறார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்கத் தவறிவிட்டேன், மிக முக்கிய படை நடவடிக்கையில் நாம் தோற்விட்டோம். நான் அதற்கு முழு பொறுப்பையும் ஏற்கிறேன் ஆனால் காசா போரின் வெற்றிவரை நான் எனது பதவிவிலகலை தள்ளிப்போடுகிறேன் என ஹலிவா முதலில் தொவித்திருந்தார்.

எனினும் 7 மாதங்கள் கடந்த நிலையில் காசா போரில் இஸ்ரேல் வெற்றி பெறாதபோதும், தோல்விக்கான உள்ளக விசாணைகளை வலியுறுத்தி அவர் தனது பதவியை துறந்துள்ளார். உள்ளக விசாரணைகள் ஜுன் மாதம் ஆரம்பமாகவுள்ளன. இந்த தோல்வியின் வலிகள் என் வாழ்நாள் முழுவதும் இருக்கும் என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

03 உலகில் மிகச்சிறந்த புலனாய்வு அமைப்பின் தோல்வி - வேல்ஸில் இருந்து அருஸ்3000 ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து மேற்கொண்ட தாக்குதலில் 350 படையினர் உட்பட 1200 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 253 பேர் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர். ஆனால் கடந்த 7 மாதமாக இஸ்ரேலிய படையினரால் அவர்களை மீட்க முடியவில்லை.

தாக்குதல் இடம்பெற்ற சமயம், செங்கடலின் கரையில் உள்ள எய்லற் பகுதியில் ஆடம்பரவிடுதியில் ஹலிவா விடுமுறையை கழித்துக்கொண்டிருந்தார். தாக்குதல் இடம்பெறப்போவதாக அதிகாலை 3 மணிக்கு அவருக்கு தகவல் சொல்லப்பட்டபோதும் அவர் அதனை பொருட்படுத்தவில்லை. அது தொடர்பில் படைத்துறையின் உயர் மட்டங்களுடன் அவர் கலந்தாலோசிக்கவுமில்லை.

ஆனால் தான் அப்படி உயர் மட்டத்தினருக்கு தெரியப்படுத்தினாலும், தாக்குதலை தடுப்பதற்கான காலஅவகாசம் கடந்து விட்டது எனவே அது பயனளிக்காது என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த தாக்குதல் திட்டம் தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னரே கலந்துரையாடப்பட்டதாக புலனாய்வுத்துறையின் அதிகாரிகள் சிலர் தெரிவித்ததாக இஸ்ரேலின் அலைவரிசை 12 என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.

04 உலகில் மிகச்சிறந்த புலனாய்வு அமைப்பின் தோல்வி - வேல்ஸில் இருந்து அருஸ்ஹமாஸ் படையினர் பயிற்சிகளில் ஈடுபடுவது மற்றும் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டங்களை காவல் கோபுரங்களில் இருந்து படையினர் அவதானித்துள்ளதுடன், தகவல்களை புலனாய்வுத்துறைக்கு அனுப்பியிருந்தனர். அதாவது ஒரு வருடத்திற்கு முன்னரே இந்த தாகவல்கள் தெரியும் எனவும், ஆனால் அத்தகைய தாக்குதலை நடத்தும் வலு ஹமாஸிடம் இல்லை என இஸ்ரேலிய புலனாய்வுத்துறை நம்பியதாக த நியூயோர்க் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஓக்டோபர் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலின் அரசியல் மற்றும் படைத்துறை தோல்விகளுக்கு எதிராக பொதுமக்களிடம் பலத்த எதிர்ப்புக்கள் அதிகரித்து வருகின்றது. இஸ்ரேலிய பிரதமர் நெத்தனியாகு பதவிவிலக வேண்டும் என தொடர் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுவருகின்றன.

இஸ்ரேலின் மத்திய படைக்கட்டமைப்பை சேர்ந்த கட்டளை அதிகாரியான ஜெகுடா புஸ்ச் என்பவரும் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். இவர் மேற்குக்கரைப் பகுதிக்கு பொறுப்பானவர். 1973 ஆம் ஆண்டு இடம்பெற்ற யோம் கிபூர் போர் மற்றும் 1982 ஆம் ஆண்டு இடம்பெற்ற லெபனான் படுகொலை தொடர்பில் அமைக்கப்பட்ட விசாரணக்குழுக்கள் இஸ்ரேலில் பலத்த அரசியல் சர்ச்கைகளை ஏற்படுத்தியிருந்தன. அவ்வாறான ஒரு நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

05 உலகில் மிகச்சிறந்த புலனாய்வு அமைப்பின் தோல்வி - வேல்ஸில் இருந்து அருஸ்இஸ்ரேலிய புலனாய்வுத்துறையின் தோல்விக்கு எதிராக இஸ்ரேலில் எதிர்ப்புக்கள் வலுவாகி வருகின்றன. இஸ்ரேலின் ஜனநாயகத்துக்கான நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் ஒக்டோபர் 7 தாக்குதலை தடுக்க தவறியவர்கள் பதவி விலக வேண்டும் என 62 விகித மக்கள் விரும்புகின்றனர். இந்த வருடம் தேர்தல் இடம்பெறவேண்டும் என 51 விகிதமானவர்கள் விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளது.

ஆனால் காசா போர், ஹிஸ்புல்லாக்களுடன் மோதல், ஈரானுடன் மோதல் என களமுனைகள் விரிவாக்கம் அடைந்துள்ளதால் இஸ்ரேலிய அரச மற்றும் படைத்துறையில் உள்ளவர்கள் பதவி விலக மறுக்கின்றனர். எனினும் தற்போது ஹலிவாவின் பதவி விலகல் என்பது நெத்தனியாகுவின் பதவி விலகலுக்கான கோரிக்கையை வலுப்பெற வைத்துள்ளது. தற்போதைய அரசில் நம்பிக்கை இழந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

புலனாய்வு அதிகாரியின் பதவி விலகலை மதிப்பதாகவும், அதனை இஸ்ரேலிய பிரதமர் பின்பற்ற வேண்டும் எனவும் இஸ்ரேலின் எதிர்க்கட்சியின் தலைவர் ஜாயிர் லபிட் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய அரசு மற்றும் படையினர் மீது போர்க்குற்ற விசாரணை தொடர்பான கோரிக்கைகளும் வலுப்பெற்று வருகின்றன.

அதேசயம், ஈரானின் ஜெனரல்கள் மீதான சிரியா மற்றும் லெபனானில் இடம்பெற்ற தாக்குதல்களும் அதன் பின்விளைவுகள் தொடர்பான தவறான கணிப்புக்களும் இஸ்ரேலிய புலனாய்வுத்துறையின் பின்னடைவாக பார்க்கப்படுகின்றது. இஸ்ரேலினுள் ஈரான் தாக்குதல் நடத்தமாட்டாது என இஸ்ரேலின் புலனாய்வுத்துறை தவறான நம்பிக்கையை இஸ்ரேலிய அரசுக்கு கொடுத்துள்ளது.

அது மட்டுமல்லாது நவாட்டிம் வான்படைத்தளம் மீதான ஈரானின் தாக்குதலை தடுக்கமுடியாது போனதும் இஸ்ரேலிய படையினரின் மனநிலையை அதிகம் பாதித்ததாக கூறப்படுகின்றது. அதாவது ஈரான் மற்றும் ஹமாஸின் பலத்தை தவறாக மதிப்பிட்டதும் புலனாய்வுத்துறையின் தோல்வியாகவே பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் தெற்கு காசா பகுதியில் படைத்துறை மேலான்மையை ஏற்படுத்த தவறியமை, ஈரானை வெற்றிகொள்ளமுடியாமை, ஹிஸ்புல்லாக்களின் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை மற்றும் 7 மாதங்கள் கடந்த நிலையிலும் பிணைக்கைதிகளை மீட்கமுடியாமை போன்றவை இஸ்ரேலின் படைத்துறை மற்றும் அரசியல் பீடங்களை ஆட்டம்காணவைத்துள்ளது.

அதாவது படைத்துறை மற்றும் அரசியல் ரீதியாக உக்ரைனை விட இஸ்ரேல் மிகப்பெரும் பின்னடைவுகளை சந்தித்து வருவதையே இது காட்டுகின்றது. இந்த நிலையில் அமெரிக்கா தனது படையினரை கட்டுப்படுத்துவதாக இஸ்ரேலிய தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்களும் கிளம்பியுள்ளன.