9/11 தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிய பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

நியூயோர்க்கில் நடைபெற்ற 9/11  (இரட்டைக் கோபுரத் தாக்குதல்) தாக்குதலில் பாதிக்கப்பட்டு காயமடைந்தவர்கள், உடல்நிலை சரியில்லாமல் போனவர்கள், அதிர்ச்சியில் இருந்து மீளாதவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை நீடிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வந்த நியுயோர்க் காவல்துறையைச் சேர்ந்த துப்பறிவாளர் லூயிஸ் அல்வரெஸ் உயிரிழந்தார்.

தாக்குதலின் போது காற்றில் கலந்த விசத்தின் காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 58 வயதான லூயில் அல்வரெஸ் 68முறை கீமோதெரபி சிகிச்சைக்கு உள்ளானார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி 2020ஆம் ஆண்டிலிருந்து 2090 வரை நீடிக்க வேண்டும் என்பதை சட்டபூர்வமானதாக்குவதற்கு ஆதரவாக பேசியிருந்தார்.

ஜுன் 19ஆம் திகதி தனக்கு இருக்கும் நுரையீரல் புற்றுநோயை எதிர்த்து தான் தொடர்ந்து போராடப் போவதாக தெரிவித்திருந்தார்.

செப்டெம்பர் 2018ஆம் ஆண்டு வரை இந்தத் தாக்குதலின் பாதிப்பில் 2000பேர் வரை உயிரிழந்துள்ளனர். 2018ஆம் ஆண்டின் முடிவிற்குள், தாக்குதலில் இறந்தவர்களிலும் பார்க்க தாக்குதலின் போது காற்றில் கலந்த விசத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

லூயிஸ், தீயணைப்பு வீரர்கள், பொலிஸ் அதிகாரிகள், அவசரகால பணியாளர்கள், ஒப்பந்தகாரர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் என சுமார் 80,000 ஊழியர்கள் போன்றவர்களுக்கு உதவிகளை வழங்கினர்.