ரஸ்யா – சிறீலங்கா படைத்துறை உறவு வலுவடைகின்றது

சிறீலங்காவுடன் படைத்துறை ஒத்துழைப்புக்களை மேற்கொள்வதற்கு தாம் விரும்புவதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.

ரஸ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சிறீலங்காவவின் பிரதம பாதுகாப்பு அதிகாரியான ரவீந்திரா வீரசிங்காவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே ரஸ்யாவின் இராணுவத் தளபதி ஜெனரல் வலெரி ஜெரசிமோவ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பயங்கரவாதம் மற்றும் பிராந்தியங்களில் சிறீலங்கா எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கு சிறீலங்காவுடன் இணைந்து படைத்துறை கட்டமைப்புக்களை மேற்கொள்ள நாம் விரும்புகின்றோம்.

எமது படைத்துறை ஒத்துழைப்புக்களுக்கு சிறீலங்கா உகந்த நாடு.
தென்ஆசியாவில் சிறீலங்கா எமது சிறந்த நட்பு நாடு, சிறீலங்காவுக்கும் எமக்கும் 60 ஆண்டுகால நட்பு உள்ளது. கடந்த மாதம் சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனாவுக்கும், ரஸ்யா அதிபர் விளாமிடீர் பூட்டினுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டை நிறைவேற்றுவதே எமது முதலாவது பணி என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.